திமுக மூத்த நிர்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை செல்போனில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினார். அப்போது கனிமொழி எம்.பி., செல்போன் மூலம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு சக்திவேலிடம் பேசுமாறு கூறினார்.

இதையடுத்து, சக்திவேலிடம் முதல்வர் உடல் நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
