முதல்வர் ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

 
பிரேமலதா


 
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து  நலம் விசாரித்துள்ளார்.  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  

ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்த்


இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில் 3 நாள்கள் வீட்டில் ஓய்வை தொடர்ந்தார்.  இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்வதற்கு முன்பு  அவரது வீட்டுக்கு வருகை தந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் ஆகியோர்  உடனிருந்தனர்.

ஸ்டாலின் பிரேமலதா

கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்ட நிலையில் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த  அறிவிப்பையும் தேமுதிக வெளியிடவில்லை.  தேமுதிகாவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்காததால் பிரேமலதா அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில்  பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?