முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து அமைச்சருடன் சந்திப்பு!
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து பிரிட்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கான நாடாளுமன்ற துணைச் செயலர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி.யை சந்தித்தார். இருவரும் தமிழ்நாடு - பிரிட்டன் இடையேயான கூட்டாண்மை உறவுகள் குறித்து விவாதித்தனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் திருமிகு கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்தேன்.

பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்வழி போக்குவரத்து குறித்து விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் திறன்களை எடுத்துரைத்தேன். வருங்காலங்களில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்து ஒத்துழைக்க ஆதரவை கோரினேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
