ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை!

 
ஸ்டாலின் தமிழக அரசு
 

வியட்நாம் நாட்டில்   வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.   இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில்  2024ம் ஆண்டு  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

 இதனையடுத்து  கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி, சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வர்  ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.  முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த தொழிற்சாலையை  ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர்  ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 3-ம்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார் எனக்  தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?