ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிய முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின் பயணம்

 தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகில்  6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதில் படுகாயம் அடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள்   மீட்டு உடனடியாக  சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆம்ஸ்ட்ராங்

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில்  இந்த வழக்கிற்காக  10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்


இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சென்னை அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு செல்லும் முதல்வர் மரியாதை செலுத்துகிறார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web