முதியோர், விதவைகளுக்கு ரூ.4000 உதவித்தொகை... வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கிய முதல்வர்!

 
சந்திரபாபு நாயுடு


ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் முதியோர், விதவைகளுக்கு மாதம் ரூ.4000  உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக அவர் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார். ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள் உட்பட  பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி  மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3000ஐ   ‘என்டிஆர் பரோசா’ திட்டத்தின் கீழ் ரூ.4000 ஆக  உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சந்திரபாபுநாயுடு அறிவித்திருந்தார். 

முதியோர் பென்ஷன்
அதன்படி உயர்த்தப்பட்ட உதவிதொகை வழங்கும் திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.  உயர்த்தப்பட்ட கூடுதல் தொகையான ரூ.1000த்தை தேர்தல் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 3 மாதத்திற்கான ரூ.3000  நிலுவைத்தொகை மற்றும் இந்த மாதத்திற்கான  ரூ.4000  என மொத்தம் ரூ.7000 வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி  குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதிக்கு உட்பட்ட பெனுமகாவில், முதல்வர் சந்திரபாபுநாயுடு இன்று பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவித்தொகை வழங்கினார்.

பென்ஷன் முதியோர்
பனாவத் பாமுலா நாயக்கின் குடிசைக்கு சென்று  முதல்வர் சந்திரபாபு, முதியோர் ஓய்வூதியம் மற்றும் அவரது மகளுக்கு விதவை தொகையையும் வழங்கினார்.  அவர்களுடன் அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் உரையாடினார். அவர்கள் வீட்டில்  காபியையும் குடித்தார். பனாவத் நாயக், வீடு இல்லாமல் இருப்பதாகவும், வீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாகத் தெரிகிறது. இதனையடுத்து வீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். முன்னதாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  முதல்வர் சந்திரபாபுநாயுடு அதிகாலை 5.45 மணிக்கு உண்டவல்லி இல்லத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு பெனுமகா கிராமத்தில்  பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவித்தொகை வழங்கினார்.  பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு உரையாடினார்.  முதல்வர் இது குறித்து “ ஒரு முதல்வர் எவ்வாறு இருக்கக்கூடாது என்பது கடந்த ஆட்சியில் இருப்பவர்கள் உணர்த்தினர்

 இதனால் அவரை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். ஆனால் நல்ல முதல்வராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஏற்ப நான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்ப நான் எனது பணியை செய்வேன். ஆந்திர மாநிலத்தின் கனவு திட்டமான அமராவதி தலைநகர், போலாவரம் அணைக்கட்டு திட்டத்தை எனது 2 கண்களாக எண்ணி அதனை முடிப்பதற்கான பணிகளை செய்வேன்.  மாநிலத்தில் எவ்வளவு கடன் உள்ளது. கஜானாவில் எவ்வளவு பணம் உள்ளது என இதுவரை நான் பார்க்கவில்லை.

இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என உறுதி பூண்டுள்ளேன்.  ஏழைகள் இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றவேண்டும் என்பதே எனது கனவு. அதற்கு ஏழைகளின் வருமானத்தை உயர்த்தவேண்டும். இதுவே எனது லட்சியம். உதவித்தொகையை ரூ.3000லிருந்து ரூ.4000 ஆக  உயர்த்தியதால் இந்த அரசுக்கு ரூ.819 கோடி கூடுதல் சுமையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.  ஆந்திராவில் முதியோர் உதவிதொகை, விதவை உதவி தொகை, நோயாளிகளுக்கு உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை  என 65 லட்சத்து 18 ஆயிரத்து 496 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web