சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை.. தெற்கு ஆஸ்திரேலிய அரசு அதிரடி அறிவிப்பு!

 
சிறுவர்கள்

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள்.  ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக, தெற்கு ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று பிரதமர் பீட்டர் மலினாஸ்காஸ் அறிவித்துள்ளார்.  அதன்படி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம்.

இந்த நடைமுறையை ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச் தலைமையிலான குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web