குழந்தைகள் தினம்.... மாணவிகளுக்கு பிரியாணி விருந்து அளித்த ஆசிரியை!
நவம்பர் 14 — ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இனிப்பு, பூ வழங்கி வாழ்த்தும் மரபும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்காக கலா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் வழக்கமும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நாளை கொண்டாடாத பள்ளிகள் அரிது என்று சொல்லலாம்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தப் பள்ளி 28 மாணவிகளை மருத்துவர்களாக உருவாக்கியிருப்பது தனித்துவமான சாதனையாக உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளிநாயகி தலைமையில், பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த விழாவில், மாணவிகளின் பாடல், நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இசை ஆசிரியர் விஜயா அன்பரசன் பாடிய பாடல்கள் மாணவிகளின் கைதட்டல்களை பெற்றது.

நிகழ்ச்சிக்கு பிறகு 1000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாழை இலையில் சைவ பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மேலாண்மைக் குழுவினர் சொந்தச் செலவில் இதை ஏற்பாடு செய்திருந்தனர். பத்து ஆண்டுகளாக குழந்தைகள் தினத்தில் பிரியாணி விருந்து வழங்கி வருகிறோம் என ஆசிரியர்கள் பெருமையுடன் தெரிவித்தனர். “எங்களை ஆசிரியர்-மாணவர் என்று பிரிக்காமல் அன்புடன் நடத்தும் பள்ளியில் படிப்பதே பெருமை. இந்த பிரியாணி விருந்தை இவ்வருடம் கடைசியாக அனுபவிப்பது மட்டுமே வருத்தம்,” என +2 மாணவிகள் உணர்ச்சி கலந்த குரலில் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
