கதறும் சீனா... வேகமெடுக்கும் ஹெச்எம்பிவி வைரஸ்.. தடுப்பூசியும் கிடையாது... என்னென்ன அறிகுறிகள்? சிகிச்சை முறைகள்!

 
சீனா

கடந்த 2019ல் உலக நாடுகளுக்கு பல்லி, பூரான், பாம்பு, தேள் போன்றவைகளை சாப்பிட்டு வரும் சீனர்கள் எப்போதும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார்கள் என்று உலகம் முழுவதுமே சீனாவின் வூகான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது பலத்த குரல்கள் எதிரொலித்தது. 

இப்போது 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மீண்டும் சீனா மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. சீனாவில் தற்போது ஹெச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது சீனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா

ஹெச்.எம்.பி.வி வைரஸ் கடந்த 2001ல் முதன்முதலாக நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.  சீனாவில் நிமோனியா காய்ச்சல் திடீரென அதிகரித்து வந்த நிலையில், காரணம் தெரியாமல் கண்காணித்து வந்த அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம், ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. 

தற்போது உறைபனிக்காலமாக சீனாவில் குளிர்காலம் நிலவி வரும் நிலையில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர். 

என்னென்ன அறிகுறிகள்:

இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான முக்கிய அறிகுறிகளாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களையும் தாக்குகிறது என்றும், மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும் கூட அறிகுறிகளாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளாக இருப்பதாக சீன மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களே இந்த நோய் அதிகம் தாக்குகிறது என்றும், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள்  மூலமாகப் பரவுவதாகவும் கூறியுள்ளனர். மீண்டும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் அதிர்ச்சியில் உலக நாடுகள் பயத்தில் உறைந்துள்ளன.

சீனா

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 3 முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்றும், ஹெஎம்பிவி வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. 

நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மீண்டும் கொரோனா காலத்தைப் போல மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்ட நெரிசலான பகுதிகளுக்குச் எல்வதைத் தவிர்ப்பது என்று கொரோனா கால நடைமுறைகளை இப்போது சீனர்கள் மீண்டும் கடைபிடித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web