சீனாவின் முன்னாள் பிரதமர் மாரடைப்பால் திடீர் மரணம்!

 
சீனா பிரதமர் லீ கெகியாங்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பால் காரணமாக உயிரிழந்தார். தனது 68வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த லீ கெகியாங், சீனாவின் தற்போதைய அதிபரின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டு வந்தார். 

சீனாவின் பிரதமராக கடந்த 2013 முதல் 2023 வரை 10 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் லீ கெகியாங்.  இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.


இதற்கிடையே 68 வயதான அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷாங்காய் நகரில் வசித்து வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

சமீப நாட்களில் ஷாங்காய் நகரில் ஓய்வெடுத்து வந்த லீ கெகியாங்கிற்கு நேற்று நள்ளிரவு  (அக். 26ம் தேதி) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. நள்ளிரவில் 12.10 மணிக்கு அவர் ஷாங்காயில் உயிரிழந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு விரைவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும்  ஊடகங்கள் கூறியுள்ளன. சீனாவில்  பல்வேறு  சீர்திருத்தங்களை  ஆர்வத்துடன் மேற்கொண்ட லீ கெகியாங்,  நாட்டின் வருங்காலத் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜி ஜின்பிங் இவரை ஓவர்டேக் செய்து அதிபரானார். 

அதன் பிறகே ஜி ஜின்பிங் தலைமையில் அவருக்குக் கீழ் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார். பெக்கிங் பல்கலைக்கழகத்தில் படித்த பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரது திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web