அமெரிக்கா, இந்திய இறக்குமதிக்கு 50% வரி நியாயமற்றது ... சீன அதிபர் அதிரடி!
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, BRICS நாடுகள் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) ஒன்றிணைந்து, பரஸ்பர வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் ஒரு தலைபட்ச வரி விதிப்புகள் உலகப் பொருளாதாரத்தை பாதிப்பதாகவும், சர்வதேச வர்த்தக விதிகளை அவை பலவீனப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

BRICS நாடுகள், தங்கள் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பன்முக வர்த்தக அமைப்பை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், BRICS மாநாட்டில் பேசுகையில், வர்த்தக பற்றாகுறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் BRICS நாடுகள் உலக அளவில் ஒரு முன்மாதிரியாக விளங்க முடியும் எனக் கூறியுள்ளார். “நியாயமான, பாகுபாடற்ற மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகக் கொள்கைகளைப் பாதுகாக்க இந்தியா உறுதியாக உள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார். இந்தியா, பன்முக உறவுகளை ஆதரிக்கும் அதே வேளையில், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எதிராக BRICS நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங், அமெரிக்காவின் இந்தியா மீதான 50% வரி விதிப்பை “நியாயமற்ற மற்றும் பொருத்தமற்றது” என்று விமர்சனம் செய்துள்ளார். “இந்தியாவும் சீனாவும் உலகின் முக்கியமான வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள். இந்த வரி விதிப்பை எதிர்கொள்ள, இரு நாடுகளும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தியாவும் சீனாவும் 2026 மற்றும் 2027ல் BRICS மாநாடுகளை நடத்துவதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளன. BRICS நாடுகள், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலம், உலக வர்த்தகத்தில் நியாயமான மற்றும் சமநிலையான அமைப்பு உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
