சர்ச்சையாகும் சின்மயி ட்வீட்!! உங்க நண்பர் வைரமுத்து மீது ஆக்‌ஷன் எடுங்க முதல்வரே?!

 
சின்மயி

பாடகி சின்மயி, முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று எழுகிய கடிதம் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் ஆதரவு வெளியிடுவது அற்புதமான விஷயம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கும் போது. மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனினும், சினிமாத்துறை போன்ற பல தொழில்களில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இதுவரை எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை.


உங்கள் நண்பரும் ஆதரவாளருமான வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர். இன்னும் உங்களுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார் தனக்கு எதிராகப் பேசும் பெண்களை வாய்மூட வைக்க, உங்களுடனான நெருக்கத்தை அவர் பயன்படுத்தி வருகிறார். உங்கள் கட்சி மற்றும் பிற அரசிவல்வாதிகளின் நிகழ்ச்சிகளில் அவர் இப்போதும் பங்கேற்று வருகிறார். வைரமுத்து மீது நான் பாலியல் புகார் அளித்திருக்கிறேன். இதனால், தமிழ்த்திரையுலகில் ஏறக்குறைய 5 ஆண்டுகளாக எனக்கு தடை இருந்து வருகிறது. நான் தொடர்ந்த வழக்கு, சென்னை சிவில் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை அதிகார செல்வாக்கு கொண்டவர்களுடன் நெருக்கம் இல்லாத நிலையில், இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும், நீதிக்காகப் போராட எனக்கு சக்தி உள்ளது.


2018-19ல், தேசிய பெண்கள் கமிஷனில் புகார் அளித்தேன். ஏனென்றால், எங்களைப் போன்றவர்களுக்கு அதுதான் ஒரே வாய்ப்பு. வீட்டுக்கு வந்து விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம், எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளேன் வைரமுத்துவுக்கு எதிராக அவரது போன் அழைப்பு ஆதாரங்கள் உள்ளிட்ட சூழல் சாட்சியங்கள் என்னிடம் போதுமான அளவில் உள்ளன. அவரது மகன் மதன் கார்க்கிகும் இதுபற்றி டெக்ஸ்ட் மூலம் தகவல் அளித்தேன். பின்னர் எள்ளிடம் பேசிய அவர், தனது தந்தையின் இப்படிப்பட்ட நடத்தை குறித்து அவரது குடும்பத்துக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று ஒப்புக்கொண்டி குக்கிறார். வைரமுத்துவுக்கும் பிரிஜ் பூஷணுக்கும் வெவ்வேறு விதிகள் இருக்க முடியாது. ஒரு மைனர் சிறுமி உள்ளிட்ட மல்யுத்த சாம்பியன்கள், பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். (அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வைரமுத்து
ஆனால், 17க்கும் மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார் அளித்துள்ள நிலையிலும், வைரமுத்து உங்களுடனும் உங்கள் கட்சியுடனும் உள்ள நெருக்கத்தை, என்னையும் பிறரையும் வாய்மூட வைக்கபயன்படுத்தி வருகிறார், திறமைகளும் வாழ்க்கை கனவுகளும் நிறைத்த பெண்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தி வருகிறார். இவை எல்லாமே. உங்கள் கண் முன்பே நடக் கிறது. தயவுசெய்து, தமிழகத்தில் உள்ள பணியிடங்களைப் பாதுகாப்பானவையாக மாற்றுங்கள். வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கால், அவருக்கு எதிராகப் பேச. எல்லோருமே மிகவும் பயப்படுகிறார்கள்

அவர் மீது புகார் அளிக்கவே கூடாது என சொந்த துறையினராலேயே தடுக்கப்படுபவர்களில் ஒருவராகத்தான், இதையெல்லாம் குறிப்பிடுகிறேன். சினிமாத்துறையில் பலரும் இப்போதும் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்து வருகின்றனர் எனவே, அனைத்துப்பிரிவுகளிலும், பாலியல் குற்ற விசாரணை அமைப்பு இருப்பதை உறுதிசெய்யுங்கள். இவ்வாறு கடிதத்தில் சின்மயி முறையிட்டுள்ளார். இந்த கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சின்மயி. இதன் நகலை திமுக எம்பி கனிமொழிக்கு அனுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web