நாளை சித்ரா பௌர்ணமி.. கிரிவலம் எந்த நேரத்தில் சென்றால் முழு பலன்?

 
திருவண்ணாமலை

நாளை சித்ராபெளர்ணமியை முன்னிட்டு, வழக்கமாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களை விட அதிகளவில் பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கிரிவலம் செல்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காதீங்க. புண்ணியத்தைத் தேடி கிரிவலம் செல்பவர்கள், புண்ணியத்தை சேர்க்காவிட்டாலும், பாவத்தை சுமந்து வர வேண்டாம். பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

அப்படி வந்து தரிசிப்பவர்கள், திருவண்ணாமலையிலேயே தங்கி விடுவதும் உண்டு. இன்பச்சுற்றுலாவுக்காக வருபவர்களும் கூட, அண்ணாமலையாரைப் பார்த்து, மெய் மறந்து அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து செல்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கிரிவலப் பாதைகளில் நிறைய வெளிநாட்டினர் நிரந்தரமாக இங்கேயே தங்கி இருப்பதைக் காணலாம்.  பொதுவாகவே பெளர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் அதிகரிப்பது வழக்கம் என்றாலும், சித்ராபெளர்ணமியன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். 

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், மலையையே சிவன் வடிவாக கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள். மலையை சுற்றியுள்ள 14 கிமீ.  தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த வருடம் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை

அதன்படி இன்று மே 4ம் தேதி இரவு 11.59 மணிக்கு சித்ரா பெளர்ணமி துவங்கி நாளை மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 வரை பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நாளாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web