ச்சோ க்யூட்... செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் காதலி விக்டோரியா மலோனை மணந்தார்.. குவியும் வாழ்த்துகள்!!
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சென் தனது நீண்ட நாள் காதலி எல்லா விக்டோரியா மலோனை இன்று தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ஒஸ்லோவில் திருமணம் செய்து கொண்டார்.
Congratulations to Magnus and Ella 💍 pic.twitter.com/1N5J2VIb1G
— Chess.com (@chesscom) January 4, 2025
மாக்னஸ் கார்ல்சன் - எல்லா விக்டோரியா மலோன் திருமண விழா ஒஸ்லோவில் உள்ள ஹோல்மென்கொல்லன் சேப்பலில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் போட்டியின் போது இருவரும் தங்களது காதல் உறவு குறித்து பகிரங்கப்படுத்தினர். அப்போதிருந்து இந்த ஜோடி ஒவ்வொரு நிகழ்விலும் ஒன்றாகக் காணப்பட்டது. ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் சமீபத்தில் FIDE உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டத்தை இயன் நெபோம்னியாச்சியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!