88 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சாக்லேட்....நெகிழ்ச்சி...!!
ஒரு பொருளை மறைச்சு வச்சா ஒரு நாள் தேடலாம் 2 நாள் தேடலாம். வருஷக்கணக்கில் அதுவும் 80 வருஷமாக தேடிட்டே இருந்து ஒரு கட்டத்தில தன் வாரிசுங்க கிட்ட சொல்லிட்டு இறந்தே போனாங்க. அப்புறம் திடீர்னு ஒரு நாள் காணாம போன பொருள் கிடைச்ச போது தன்னுடைய அம்மாவே வந்திட்டதா பிள்ளைங்க நெகிழ்ந்து போயிட்டாங்க.. அந்த பொருள் சாக்லேட் தான். இத்தன வருஷமா சாக்லேட் நல்லா இருக்குமா?ங்கிற கேள்விக்கே இடமில்ல... இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள லீட்ஸ் பகுதியில் வசிக்கும், வேறா பெட்செல் என்ற 8 வயது சிறுமிக்கு 1935ல் அவரின் தந்தை பரிசாக ஒரு சாக்லேட் அளித்துள்ளார். அவரது தந்தையினால் அளிக்கப்பட்ட இந்த பரிசு அவருக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அந்த சாக்லேட், ராஜா 5ம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரியின் வெள்ளி விழாவின் போது அளிக்கப்பட்ட சாக்லேட் அது. இந்த சாக்லேட்டை பரிசாக அளித்த போது, அதனை சாப்பிடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.
அதன் பிறகு தனது தந்தையின் அறிவுரைப்படி சாக்லேட்டை ஒரு பாதுகாப்பான பெட்டியில் போட்டு பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து வந்தார். தனக்கு 90 வயது ஆகும் வரை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த சாக்லேட் அந்த பெட்டியிலேயே இருந்துவிட்டது. சாக்லேட்டை கண்டறிய அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பெட்டியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிட்டார். கடந்த வருடம் தனது 95வது வயதில் வேறா காலமானார்.
அவரின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரும் அவரது அறையை சுத்தம் செய்தனர். அப்போது அவர்கள் அந்த பெட்டியை கண்டு எடுத்தனர். வேறாவின் நான்கு குழந்தைகளின் ஒருவரான நாடின் மெக்காஃபர்டி என்பவருக்கு தற்போது 71 வயதாகிறது. அவர்தான் அந்த சாக்லேட்டை பற்றிய ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அதாவது தனது தாய்க்கு இந்த சாக்லேட்டை பற்றிய ஞாபகம் வந்ததும் பிள்ளைகள் அனைவரையும் வீடு முழுவதும் தேட சொன்னாராம். ஆனால் எவ்வளவு தேடியும் சாக்லேட் கிடைக்கவில்லை . அதனால் வேறா சற்று வருத்தத்திலேயே இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 88 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டியில் போட்டு வைக்கப்பட்ட சாக்லெட்டை கண்டுபிடித்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் யாரேனும் அந்த பெட்டியை தவறுதலாக வெளியே தூக்கி எறிந்து இருக்கலாம் என வேறா நினைத்துவிட்டார். ஆனால் 88 ஆண்டுகள் கழித்து தற்போது கிடைத்துள்ள இந்த சாக்லேட்டை பார்ப்பதற்கு தனது தாய் உயிரோடு இல்லையே என கவலை கொள்கின்றனர். அவரின் குடும்பத்தார் தற்போது அந்த சாக்லேட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!