புதிய நாடாளுமன்றத்தில் சோழர் ‘செங்கோல்’.. அமித்ஷா அசத்தல் அறிவிப்பு!

 
சோழர் செங்கோல் பாராளுமன்றம்

பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு, முழு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2020 ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். 

Amit Shah

இம்மாதம் 28ம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது. குடியரசுத் தலைவரை வைத்து திறப்பு விழாவினை நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்த கோரிக்கையை ஆலும் பாஜக ஏற்கவில்லை. திறப்பு விழாவில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும், விழாவினை புறக்கணிக்கப் போவதாகவும் காங்கிரஸ் கட்சி, திமுக உட்பட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

New Parliament

இந்நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web