கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடா் விடுமுறை.. விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு!
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் சுற்றுலா தலங்களிலும், துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதே போன்று உள்நாட்டிலும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூரு, கேரளா, கோவா, அந்தமான் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்ளூா் விமானங்கள் மற்றும் சிங்கப்பூா், கோலாலம்பூா், தாய்லாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் சா்வதேச விமானங்களிலும் இந்த விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது.
விடுமுறை நாட்களில் விமானக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். உள்நாட்டு விமான கட்டணங்கள் (அடைப்புக் குறிக்குள் கொடுத்திருப்பது வழக்கமான கட்டணம்):
சென்னை - தூத்துக்குடி ரூ. 14,281 (ரூ. 4,796).
சென்னை -மதுரை ரூ. 17,695 (ரூ.4,300).
சென்னை - திருச்சி ரூ. 14,387 (ரூ.2,382)
சென்னை - மைசூரு ரூ. 9,872 (ரூ.3,432)
சென்னை - கோவை ரூ. 9,418 (ரூ.3,485)
சென்னை - சேலம் ரூ. 8,007 (ரூ .3,537).
சென்னை - திருவனந்தபுரம் ரூ.13,306 (ரூ.3,821)
சென்னை - கொச்சி ரூ.18,377 (ரூ.3,678)
சா்வதேச விமான கட்டணங்கள்:
சென்னை - சிங்கப்பூா் ரூ. 16,861 (ரூ. 7,510)
சென்னை - கோலாலம்பூா் ரூ. 33,903 (ரூ.11,016)
சென்னை - துபை ரூ. 26,752 (ரூ.12,871)
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!