கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... கன்னியாகுமரியில் குவியும் மக்கள்... உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

 
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி
நாளை இயேசு கிறிஸ்து பிறக்கிறார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இன்று டிசம்பர் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். எனிமும் முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதி செவ்வாய் கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

(2)  24.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (28.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

(3)  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால்  இன்று 24.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web