பார்த்து ஓட்டுங்க... அரசுப் பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த சுற்றறிக்கை!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் பொதுமக்கள் எத்தனை அறிவுறுத்தியும் திருநெல்வேலியில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சுரங்கப்பாதை பாலத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து அவர்களை பத்திரமாக மீட்டு அனுப்பினர்.

இதனையடுத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் அடுத்தடுத்து பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மே 20ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், மேலும் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும் போது சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
