சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை... ஆன்லைன் விளையாட்டால் தொடரும் விபரீதங்கள்!

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. கோவை மாவட்டம் பீளமேட்டில் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருபவர் சகர்தர். 34 வயதான சகர்தர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் வழக்கம் போல் நேற்று கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய கையில் பாதுகாப்புக்காக ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்தார். பணியில் இருந்தபோதே திடீரென அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். உடனே கழிவறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான சகர்தர் தனக்குத்தானே தலையில் துப்பாக்கியால் சுட்டபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நீண்ட நாட்கள் ஆக மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவித்தார். இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!