உ.பி சுற்றுலா பயணிகளுடன் மோதிய விவகாரம்.. 3 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்!

 
காரைக்காடு சோதனைச்சாவடி

உத்தரபிரதேசத்தில் இருந்து மேட்டூர் வழியாக கர்நாடகா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை தமிழக-கர்நாடக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ​​போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைக் கொண்டு வருமாறு ஓட்டுநரிடம் கூறினர்.

ஆனால், வடமாநிலத்தை சேர்ந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் பணியில் இருந்த போலீசார் சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசன் ஆகிய 3 பேரையும் வட மாநில மக்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு ஆதரவு அளித்து வட மாநில மக்களை தாக்கி போலீசாரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், பேருந்து ஓட்டுநர் சிவநாராயணன், உதவியாளர் அஜய் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து காரைக்காடு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸார் மற்றும் கிராம மக்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சுகவனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web