10ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்.. விசாரணையில் வெளிவந்த உண்மை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் சரக்கு வாகனத்தில் வந்தார். மாணவி நிற்பதை பார்த்த ஆகாஷ், அவரிடம் சென்று மாணவியை பள்ளியில் விடுவதாக கூறி மாணவியை தனது வாகனத்தில் ஏற்றி சென்றார்.
ஆனால் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அத்திப்பாக்கம் பாதுகாப்பு வனப்பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்றார். மேலும் மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கதறி அழுததுடன் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். பயந்து போன மாணவி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவிக்கு எதிர்பாராதவிதமாக வீட்டில் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தங்கள் மகளுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதை அறிந்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆகாஷ் என்ற 24 வயது வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!