2024-25 ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 
CBSE மாணவர்கள்

 இன்று மே 13ம் தேதி 2023-24ம் தேதிக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு அதாவது 2024-25 ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான போர்டு தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  "2025 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளை பிப்ரவரி 15, 2025 முதல் நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது" என சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வா கூறியுள்ளார்.   2024 போர்டு தேர்வுகளும் பிப்ரவரி 15 அன்று 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்குத் தொடங்கின  .

மாணவிகள் தேர்வு சிபிஎஸ்இ

 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை  பொறுத்தவரை  தேர்வில் 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 94.75% பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், 2.04 சதவீத புள்ளிகள் மூலம் மாணவர்களை காட்டிலும் மாணவிகள்  அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர், மேலும் 2.12 லட்சத்துக்கும் அதிகமானோர் 90%க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 சிபிஎஸ்இ

12 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, சிபிஎஸ்இ முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது  87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.65 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 18,417 பள்ளிகள் CBSE பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை 7,126 மையங்களில் நடத்தின, திருவனந்தபுரம் மண்டலம் 99.91% தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.ஒட்டுமொத்த டெல்லி பிராந்தியத்தில், 94.9% தேர்ச்சி சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது, 91.52% பெண்கள் மற்றும் 85.12% சிறுவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகமாக உள்ளனர். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை results.cbse.nic.in, cbse.gov.in, அல்லது cbseresults.nic.in உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ இணையதளங்கள்  மூலமாகவும், UMANG ஆப், டிஜிலாக்கர் ஆப், பரிக்ஷா சங்கம் போர்டல் மற்றும் SMS வசதி மூலமாகவும் அணுகலாம். .

10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி, 10 ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 2 ம் தேதியும் முடிவடையும். சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற, மாணவர்கள் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web