10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!! மாணவர்களே குறிச்சிக்கோங்க!!

 
மாணவிகள்

நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்திருந்தனர். திண்டுக்கல் மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வுகள் ஜூன் 19ம் தேதி நடத்தப்படும். இன்று முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

தேர்வு

அதன்படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சென்ற கல்வியாண்டில் 10 ம் வகுப்பு  மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டன.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.  10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை  ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

ஏற்கனவே தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது 19ம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும். அந்த காலகட்டத்தில் வேறு  ஏதேனும் சவால்கள்   ஏற்பட்டால், 19ம் தேதியே இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி  ஏப்ரல்20ம் தேதிமுடிவடைந்தது. ஏப்ரல் 25ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web