நாளை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு மதிப்பீட்டு பட்டியல் வெளியீடு!

 
தேர்வுகள் இயக்ககம்

நாளை 11ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 2025ல் நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளின் படி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு சில மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இது குறித்த தகவல் ஒன்றை அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள்

அதில்  நடந்து முடிந்த மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேவுவின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நோட்டிபிகேஷன் என்ற பகுதியில் ஜூன் 30ம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று பிற்பகல் முதல் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டல் மறுமதிப்பீட்டல் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள்   மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை  பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது