லவ் பண்ண மறுத்த 12ம் வகுப்பு மாணவி... நடுரோட்டில் குத்திக் கொன்ற இளைஞன்!
ராமநாதபுரம் மாவட்டம், சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான ஷாலினி எனும் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, குப்புசாமி மகன் முனிராஜ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஒருதலையாக காதலித்து வந்த முனிராஜின் காதலனை ஷாலினி ஏற்க மறுத்து வந்த நிலையில், “என்னை லவ் பண்ண மாட்டியா?” என்று கேட்டு, ஷாலினியைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதலிக்க மறுத்து வந்த ஷாலினியை, நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, முனிராஜ் நடுரோட்டில் மடக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த விபரீத சம்பவத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஷாலினியைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே ஷாலினி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முனிராஜை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
