டேட்டிங் ஆப் மூலம் வாடிக்கையாளர்... அபார்ட்மெண்ட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம்!
சாலிகிராமத்தில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி இரவு நேரங்களில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் திடீரென அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராகுல் (எ) சஞ்ஜிப் ராய் (22) என்பவர், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சஞ்ஜிப் ராயை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண் ஒருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!