பெருந்துயரம்... கேரளாவை தொடர்ந்து இமாச்சலத்தில் மேக வெடிப்பு... 28 பேர் மாயம்!
கேரளாவை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கனமழையால் 46 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். சிம்லா மாவட்டம், ராம்பூர் அருகே சமேஜ் காட் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 36 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் 10 பேர் மாயமாகியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, துணை ஆணையர் அனுபம் கஷ்யப் தலைமையில் அப்பகுதிக்கு சென்ற காவலர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மீட்பு குழுவில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீட்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார். ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய ஜெ.பி.நட்டா, மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். அத்துடன் பாஜக தொண்டர்கள் மீட்புப் பணிகளில் இணைந்து செயல்படவும் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
