பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணத்தொகை அறிவிப்பு!

 
பட்டாசு நிவாரணம்

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30 மணிக்கு இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். . மேலும், 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சில தொழிலாளர்களுக்கு சிவகாசிஅரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலையின் போர்மேனை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பட்டாசு விபத்து

இப்பொது, உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?