எஸ்.ஐ.ஆர் குறித்த சந்தேகங்களுக்கு ஹெல்ப்லைன் நம்பரை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து இணைந்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் மட்டுமன்றி தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பிமாரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்டாலின்

கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான நிலை, களத்தில் உருவாகும் சந்தேகம், குழப்பம், அதனை மக்கள் மத்தியில் எளிமையாக விளக்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்காளர் உரிமை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைவதைத் தடுக்க பல்வேறு திட்டங்களுக்கு பாஜக முயற்சி செய்கிறது. எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் நெருங்கி நிற்கிறது” எனக் கூறினார்.

ஸ்டாலின்

அவர் தொடர்ந்து, “நமது மக்களின் வாக்குரிமையை காக்க திமுகவினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வரும் 11ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மேலும், எஸ்.ஐ.ஆர் குறித்து மக்கள் சந்தேகம் அல்லது தகவல் பெற்றால் தொடர்பு கொள்ள திமுக அமைத்துள்ள ‘வார் ரூம்’ தொலைபேசி எண்ணை அவர் அறிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செயல்படும் ‘வார் ரூம்’ எண்: 08065420020 எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பது கட்சியின் முக்கிய நோக்கமாக இருப்பதாக முதல்வர் வலியுறுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!