30லட்சம் மலர்களால் அலங்காரம்... மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
ஸ்டாலின்


சென்னை செம்மொழிப் பூங்காவில்  தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில்  இன்று 4வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து இங்கு  ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.  

செம்மொழி பூங்கா


செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இந்த கண்காட்சியை   இன்று பூங்காவிற்கு வருகை தந்த முதல்வர்  ஸ்டாலின் அங்கிருந்த மலர்களை பார்வையிட்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்மைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  

மலர் கண்காட்சி

இந்த மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ அல்லது புகைப்படங்கள் உள்ளே சென்று எடுக்க விரும்புபவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான  நுழைவுச் சீட்டை mhorticulture.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web