பிரபல உணவகத்தில் பிரியாணியில் கரப்பான் பூச்சி... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

 
மட்டன் பிரியாணி கரப்பான்பூச்சி

 இந்தியா முழுவதும் பல பகுதிகளில் உணவே விஷமாகி வருகிறது. உணவக தொழிலாளர்களின் அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணம். உணவக உரிமையாளர்கள் சற்று கவனமும், கண்டிப்புடனும் நடந்து கொண்டால் இத்தகைய  விபரீதங்களை தடுத்துவிடலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.ஆனால் தினமும் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் எந்நேரமும் உணவிற்காக கூட்டம் அலைமோதும் ஒரு கடை.

பிரியாணியில் கரப்பான்பூச்சி

இந்த கடையில்  வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன் வாடிக்கையாளர் ஆசை ஆசையாக சாப்பிடத் தொடங்கினார்.  அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டார்.ஆனால் ஹோட்டல் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்  உடனடியாக  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தாமதிக்காமல் வந்து சேர்ந்த  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டலை ஆய்வு செய்தனர். அத்துடன்  உணவு மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வக அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web