கோவையில் கூட்டு பலாத்காரம் : சிகிச்சை முடித்து மாணவி வீட்டுக்கு திரும்பினார்!
கோவை விமான நிலையப் பகுதியில் நடைபெற்ற கூட்டு பலாத்காரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 வயது கல்லூரி மாணவியும், தாக்குதலில் காயமடைந்த அவரது காதலனும் கோவை அரசு மருத்துவமனையில் பலநாட்கள் சிகிச்சை பெற்றனர். தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட இருவரும் தற்போது முற்றிலும் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த வாரம் இரவு, மாணவி தனது காதலனுடன் காரில் பேசிக்கொண்டு இருந்தபோது, சதீஷ் என்ற கருப்பசாமி (30), அவரது தம்பி கார்த்தி என்ற காளீஸ்வரன் (20), தவசி (20) ஆகியோர் அங்கு வந்து காதலனை அரிவாளால் வெட்டியதுடன், மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு பின் பீளமேடு போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். தப்பிச் செல்ல முயன்ற அந்த 3 பேரையும் எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டில் கால் பகுதியில் காயப்படுத்தி கைது செய்தனர். பின்னர் காயமடைந்த கும்பல் உறுப்பினர்களும், பாதிக்கப்பட்ட இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தவசி மற்றும் சதீஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கார்த்திக்கு இன்னும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மாணவி மற்றும் அவரது காதலன் வீடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சில கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கார்த்தி குணமடைந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அடையாள அணிவகுப்பு நடைபெறும். அதன் பின் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும், இம்மூவருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலைக்கேஸுடன் தொடர்பு இருக்கலாம் என்ற தகவலையும் விசாரணை மூலம் உறுதிப்படுத்த உள்ளோம்” என்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
