கோவை : மொட்டையடித்து ராகிங்... பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

 
ரேகிங்

தமிழகத்தில் நாவரசு துவங்கி, சரிகாஷா வரை பல மாணவ, மாணவிகளின் உயிர்களைக் காவு வாங்கியும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் திருந்துவதாக இல்லை. ராகிங் கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டும், பல புகழ்மிக்க கல்லூரிகளிலும் கூட ராகிங் பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஜூனியர் மாணவருக்கு, மொட்டையடித்து ராகிங் கொடுமை செய்த 7 மாணவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு, சீனியர் மாணவர்கள் 7 பேர் ஒன்று சேர்ந்து, ராகிங் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சீனியர் மாணவருக்கு மொட்டை அடித்துள்ளனர் . மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவர் தாக்கியும் துன்புறுத்தியுள்ளனர். 

arrest

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த புகாரின் அடிப்படையில் சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web