பகீர் வீடியோ... சரிந்து விழுந்த ரயில் நிலைய கட்டுமானம்... இடிபாடுகளில் சிக்கிய 2 டஜன் தொழிலாளர்கள் !
உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த இடிபாடுகளில் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் அதில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Kannauj, Uttar Pradesh: An under-construction lintel collapsed at Kannauj railway station; several workers trapped
— ANI (@ANI) January 11, 2025
More details awaited pic.twitter.com/vqefsjtXDc
ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் மற்றும் நிர்வாக குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த உத்தரபிரதேச சமூக நலத்துறை அமைச்சரும், கன்னோஜ் சதாரின் பாஜக எம்எல்ஏவுமான அசீம் அருண், “இடிபாடுகளுக்குள் யாரும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே முன்னுரிமை,” எனக் கூறியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டதில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை” எனவும் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!