அதிர்ச்சி வீடியோ!! தலைமை ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய சக ஆசிரியைகள்!!
கல்விக்கூடங்கள் போராட்டக்களங்களாக மாறிவருகின்றன. ஆசிரியரை குறித்து புகார் அளிப்பதும், மாணவர்கள் தங்களுக்குள் சண்டை, வகுப்பறை கலாட்டாக்கள், ஆசிரியை திட்டினால் அங்கிருந்து தற்கொலை, பள்ளியில் பாலியல் தொல்லைகள் என தினம் தினம் ஒரு பிரச்சனை. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளுக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
પટના: બે મહિલા શિક્ષકો વચ્ચે નજીવી બાબતે ઉગ્ર બોલાચાલી બાદ થઈ મારમારી, એકબીજાને મારી ઘણી લાતો અને મુક્કા, VIDEO થયો વાયરલ#Patna #bihar #teachers #fight #VIDEO #VideoViral#socialmedia #trendingvideos#vatannivat #dailynews#DailyNewsUpdates
— Vatan Ni Vat (@vatannivat1) May 26, 2023
Video Source: Twitter pic.twitter.com/vKecudn5bP
வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை ஜன்னலை மூடச்சொல்லி உத்தரவிட்டார் . இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது அடிதடியாகி விட்டது. முதலில் வகுப்பறையில் தொடங்கிய அடிதடி, பள்ளிக்கு வெளியே உள்ள மைதானத்தில் தலைமை ஆசிரியை காந்திகுமாரியை அனிதா குமாரியும் மேலும் ஒரு ஆசிரியையும் சேர்ந்து தாக்கினர்.
அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற 2 ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்து துவைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் சரேஷ் விடுத்த செய்திக்குறிப்பில் இரு ஆசிரியைகளுக்கும் இடையே தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததால், தாக்குதல் நடந்துள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!