பைக் மீது கல்லூரி வாகனம் மோதி பயங்கர விபத்து.. தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்!

 
சந்தனபாண்டியன்

கிருஷ்ணகிரி மாவட்டம், குட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சந்தனபாண்டியன். இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தனபாண்டியன் தனது தாய் பூங்கொடியுடன் தபால்மேடு அருகே பர்கூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கந்திக்குப்பம் அடுத்த பையனூரில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து, சாலையில் சென்ற சந்தனபாண்டியன் வாகனம் மீது மோதியது. இதில் தாயும், மகனும் பலத்த காயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திக்குப்பம் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!