இன்று முதல் தமிழகம் முழுவதும் “கல்லூரிக் கனவு” ... உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி!

 
கல்லூரிக் கனவு

 தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மாணவர்கள் பலரும் எதைப் படிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்கல்வி குறித்து வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி அரசு சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

கல்லூரிக் கனவு

’’நான் முதல்வன் ”திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.  மாவட்டவாரியாக நிகழ்ச்சி நடைபெறும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது . 
மே 8: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகபட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம்
மே 9: திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தர்மபுரி
மே 10: செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி
மே 11: காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பத்தூர்
மே 12: ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர்

கல்லூரிக் கனவு
 
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியானது இன்று நடைபெறுகிறது.  இவ்விழாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12ம்  வகுப்பு படித்த மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். மாணவ மாணவியர்கள்  எதிர்கால கனவை  நனவாக்கும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு ,  பட்டப்படிப்புகள்,  பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்த  விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web