அதிர்ச்சி வீடியோ... கல்லூரி மாணவிகள் தலைமுடியைப் பிடித்திழுத்து அடித்துக் கொண்ட கொடூரம்!
இரண்டு கல்லூரி மாணவிகள் ஒருவரோடு ஒருவர் தலைமுடியை பிடித்திழுத்து சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஜிஎன்ஐஎம்) கல்லூரியில் மாணவிகள் இரண்டு பேர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு அடித்துக் கொள்ள துவங்கினர். மாணவிகள் ஒருவரின் தலைமுடியை மற்றொருவர் பிடித்திழுத்து அடித்துக் கொள்ளும் வீடியோ வெளியாகி பெற்றோர், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
अब मारपीट में लड़किया भी नहीं है लड़को से कम, दो छात्राओं के बीच जमकर हुयी मारपीट।
— Greater Noida West (@GreaterNoidaW) December 21, 2024
ग्रेटर नोएडा के GNIMS कॉलेज का बताया जा रहा है वायरल वीडियो। pic.twitter.com/1S8MACmF6o
கிரேட்டர் நொய்டா வெஸ்ட் சமூக ஊடக தளமான எக்ஸில் பகிர்ந்த இந்த அதிர்ச்சி வீடியோவிற்கு, “இப்போது பெண்கள் சண்டையிடுவதில் ஆண்களை விட குறைவானவர்கள் அல்ல” என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு மாணவி, இளஞ்சிவப்பு ஹூடி மற்றும் டெனிம் பேண்ட் அணிந்திருக்கிறார். மற்றொரு மாணவி வெள்ளை நிற டாப் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்துள்ளார். இருவரும் ஆக்ரோஷமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
இளஞ்சிவப்பு நிற ஹூடி அணிந்த பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள கடுமையாக முயன்று தரையில் இருக்கும் மற்ற மாணவியின் தலைமுடியை பிடித்து இழுக்கிறார். ஆரம்பத்தில் இந்த சண்டையில் யாரும் தலையிட முயற்சிக்கவில்லை. சுற்றி நின்று பிற மாணவிகள் வேடிக்கைப் பார்க்கின்றனர்.
ஆனால் இளஞ்சிவப்பு நிற ஹூடி அணிந்த மாணவி மற்ற மாணவியின் வெள்ளை நிற மேலாடையை கழற்ற முயலும் போது நிலைமை வேறுவிதமாக மாறுகிறது. விரைவில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவி, இருவருக்கும் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார்.
இளஞ்சிவப்பு நிற ஹூடி அணிந்த மாணவி, மற்ற மாணவி தலைமுடியை அறைந்து இழுக்க, மற்றொரு மாணவியும் தலையிட முயற்சிக்கிறார். கல்லூரி மாணவிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வீடியோ வைரலான நிலையில் கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!