நாத்தனார் கொடுமை... கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!

 
தற்கொலை
 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே திருமணமான 5 ஆண்டுகளில் கல்லூரி பேராசிரியை தூக்கிடு தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

தற்கொலை

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமம் தெற்கு தெருவைச் சேர்நதவர் செல்வ மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள் (26). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் அவரது மாமியார் மற்றும் நாத்தனார் இவரைத் தொடர்ந்து திட்டி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச போலீஸ்

இதனால் மன வேதனை அடைந்த பேச்சியம்மாள் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் திருமணமான 5ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!