தொடரும் சோகம்.. .கல்லூரி மாணவர் ஏரியில் குதித்து தற்கொலை... தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீதம்!

 
அம்ரிதேஷ்

 கர்நாடக மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் அம்ருதேஷ். இவர்  ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தார். இவர்களது பூர்வீகம் பீகார்.  பல ஆண்டுகளாக விஜய்சங்கர் குடும்பத்துடன் ஜிகனியில் வசித்து வருகிறார்.  பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி என்ஜினியரிங்க் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜிகினி ஏரியில் குதித்து அம்ருதேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

மகனை காணவில்லை என விஜய்சங்கர் தேடிய போது தான் அம்ருதேஷ் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து  அறிந்ததும் ஜிகினி போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் அவர் தோல்வி அடைந்திருந்ததாக தெரிவித்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததாலும், தந்தைக்கு பயந்தும் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web