கல்லூரி மாணவி கார் விபத்தில் உடல் நசுங்கி பலி... பிறந்தநாள் கொண்டாட சென்ற போது பெரும் சோகம்!

 
ரஷிதா
 

கர்நாடக மாநிலத்தில்   ஒன்னஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ரக்ஷிதா. இவர்  பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி பிகாம் படித்து வருகிறார்.  ஜூலை 9ம் தேதி செவ்வாய்க்கிழமை நேற்று முன்தினம் ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள்.  தன்னுடைய பிறந்தநாள் விழாவை குடும்பத்துடன் கொண்டாட முடிவு செய்து பெங்களூருவில் இருந்து காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.  

விபத்து

இந்த கார் நந்தி கிராமத்திற்கு  அருகே சென்று கொண்டிருந்த போது  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் ரஷிதா பலத்த காயம் அடைந்து உடல் நசுங்கி  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் ஓட்டுநருக்கும் படுகாயம்  ஏற்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web