கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு... சக மாணவர் வெறிச்செயல்!

 
அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம் அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்ட நிலையில், கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1வது தெருவைச் சேர்ந்த ராமர் மகன் செண்பகராஜ் (18), முருகன் மகன் பலவேசம் ஆகிய இருவரும் நண்பர்கள். தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் படித்து வரும் முத்துக்குமரன் மகன் ஆதித்யா(19) என்பவருக்கும் பலவேசத்துக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று பிற்பகலில் சண்டை ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு

இதனை செண்பகராஜ் தடுத்து சமாதானப் படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த ஆதித்யா மற்றும் அவரது உறவினரான லட்சுமணன் மகன் சிவச்சந்திரன்(27) ஆகிய 2 பேரும் சேர்ந்து நேற்று இரவு லெவிஞ்சிபுரம் 1வது தெரு, மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த செண்பகராஜை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

அரிவாள் வெட்டு

இதைத் தடுக்க முயன்ற முனியசாமிபுரம் ராமநாதன் மகன் சக்தி(21) என்பவரையும் செங்கலால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து ஆதித்யா, சிவச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?