லாரி மோதி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலி... தம்பியும் பலியான சோகம்!

 
மதுமிதா - ரஞ்சன்
தம்பியுடன் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்த மாணவி, தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ  இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விபத்து

கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டா நாகமங்கலாவைச் சேர்ந்தவர் மதுமிதா(20). பெங்களூரு எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் படித்து வந்த மதுமிதா தனது தம்பி ரஞ்சனை(18) கல்லூரியில் விட்டுவிடக் கூறி அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக கிளம்பிய நிலையில், தனது தம்பியைப் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை மதுமிதா  ஓட்டிச் சென்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மதுமிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இருவர் மீதும் லாரிச் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி மதுமிதாவும், ரஞ்சனும் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஆம்புலன்ஸ்
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுமிதா, ரஞ்சன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மதுமிதா, ரஞ்சன் ஆகிய இருவர் மீதும் வேகமாக மோதி லாரி விபத்து ஏற்படுத்திய காட்சி பதிவாகியிருந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web