பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் பலி...கதறி துடித்த பெற்றோர்...!

 
பரோட்டா

கடந்த சில மாதங்களாகவே இளவயது மரணங்கள், இளவயதில் மாரடைப்புக்கள் அதிகரித்து வருகின்றன. மிகக் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டிருந்த போது மயங்கி சரிந்து பலி , விளையாடிய போது மயங்கி மரணம், உடற்பயிற்சி செய்த போது திடீர் உயிரிழப்பு என அடுத்தடுத்து சோகம் தொடர்கதையாகி வருகிறது. மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை , மன அழுத்தம் என என்ன வகையான காரணங்கள் கூறப்பட்ட போதிலும் இளவயதில் பிள்ளைகளை இழப்பது பெற்றோர்களுக்கு தீராத சோகமும், கவலையுமாகி விடுகிறது.
 
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.  நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன்  கண்ணம்பாளையத்தில் அமைந்துள்ள  உணவகத்தில்  பரோட்டா சாப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே காய்ச்சலும் இருந்ததால் வந்ததும் தூங்கிவிட்டதாக  கூறப்படுகிறது. இன்று காலை எழுந்திருக்கவே இல்லை. சக மாணவர்கள் எழுப்பி பார்த்தும் பலனில்லை. அதிர்ச்சியில் உடனடியாக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

பரோட்டா சாப்பிட்டதால் கர்ப்பிணி பலி!! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையில் இருந்து  காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ஆம்புலன்ஸ்
இச்சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை  பிரச்சனை ஏற்படுவது வழக்கம் என தெரிவித்தனர். அத்துடன் அவர் ஏற்கனவே  அதிக காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த சமயத்தில்  பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

From around the web