தவெகவிற்கு பேனர் வைக்க முயற்சித்த போது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டிற்கு வரவேற்பு பேனர் வைக்க முயற்சித்தார். அப்போது கல்லூரி மாணவர் காளீஸ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சார வயரை தொட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
