சித்தி பையனால் கர்ப்பமான கல்லூரி மாணவி... கருவை கலைத்ததில் உயிரிழந்த சோகம்!
திருத்தணியில் சித்திப் பையனால் கர்ப்பமான நர்சிங் மாணவி, இது குறித்து பெற்றோருக்கு தெரிந்த நிலையில், முறையற்ற உறவுமுறை காரணமாக ஆந்திராவில் தனியார் கிளினிக் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மாணவியின் 5 மாத கருவை கலைத்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகப்பிரியா (19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்த சண்முகப்பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் சண்முகப்பிரியா கர்ப்பமானார்.

சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்த நிலையில், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சண்முகப்பிரியாவின் 5 மாத கருவை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகப்பிரியாவை திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கருவை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
