விடுதி அறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவர்... அதிர்ச்சியில் நண்பர்கள்!

 
சந்தோஷ்
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்தபடியே பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை பட்டப்படிப்பு 2ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், அவருடன் விடுதியில் தங்கி இருந்த அனைவரும் நேற்று காலை வகுப்புகளுக்காக சென்று விட்டனர்.  

தற்கொலை

சந்தோஷ் வகுப்புகளுக்கு செல்லவில்லை. வகுப்புகள் முடிந்து மாலை மாணவர்கள் விடுதிக்கு திரும்பி வந்து பார்த்தபோது விடுதி அறையில், சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நீட் தேர்வு தற்கொலை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீஸார் சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவர் சந்தோஷ் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!