கல்லூரி மாணவி பைக் விபத்தில் பலி... நண்பருடன் சென்ற போது சோகம்!

 
பைக் விபத்து

கல்லூரி மாணவி ஒருவர், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் மகள் இந்துமா(20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் விஷால் (20) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும், விஷாலின் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். 

விபத்து

அப்போது இவர்களது பைக் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விடாமல் இருப்பதற்காக விஷால் முயற்சித்த போது, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவி இந்துமாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஷால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

விபத்து குறித்து மாணவியின் தந்தை செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியிவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web