ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர் பலி!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். சென்னை முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, கொருக்குப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரி இந்த 4 கல்லூரி மாணவர்கள் அடிக்கடி ரயிலில் செல்லும் போது ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொள்ளகூடிய சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன் இவரது மகன் சுந்தர் பிரசிடண்சி கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அக்டோபர் 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முன்விரோதம் காரணமாக மறைத்து வைத்திருந்த பட்டா கத்திகளை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்துரு, யுவராஜ், ஈஸ்வரன், ஹரிபிரசாத் என்கிற புஜ்ஜி, காமலேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ரயில்வே போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் நிலையத்திலோ, ரயிலிலோ போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
